Browse audiobooks narrated by Deepika Arun, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
24 audiobooks in our catalogue, every one with its narrator named.
[Tamil] - Neela Maala
"நீலா சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்த ஓர் ஏழைச் சிறுமி. மாலா சென்னையிலே புகழுடன் விளங்கும் ஒரு டாக்டரின் மகள். இருவரும் நெருங்கிய தோழிகளாகின்றனர். அவர்களது அன்பினால் பல நன்மைகள் விளைகின்றன. அவர்களது நட்பினால் பல அற்புதங்கள் நிகழ்கின்றன.ஒரு சாதாரண கிராமத்தில் தொடங்கிய இந்தக் கதை, உலக அரங்கில் எப்படி அரங்கேறியது ?"
Azha Valliyappa (Author), Deepika Arun (Narrator)
Audiobook · 3 hrs 4 mins
[Tamil] - Kadhai Sonnavar Kadhai
"Step into the world of Chittu Kuruvi Podcast, where Deepika Arun narrates inspiring stories written by Azha Valliyappa — tales about great people and their incredible journeys! In this trailer, get a glimpse of the wisdom, fun, and values packed into each story. Perfect for kids who love learning through powerful storytelling. Tune in and spark young minds with stories that stay with them!"
Audiobook · 3 hrs 1 min
[Tamil] - Panchatantra Stories
"பழைய பஞ்சதந்திரக் கதைகளை நீங்க கேட்டிருப்பீங்க—அதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் ஏமாத்தி, சண்டை போட்டு, சில சமயம் கொடுமையா நடந்துக்கற கதைகள் தான் நிறைய இருக்கும், இல்லையா? சிட்டுக்குருவி போட்காஸ்ட் ல குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் தொடர்ல, பழைய கதைகளை கொஞ்சம் மாத்தி, கருணையும் நல்ல மனசும் பிரச்சனைகளை தீர்க்கும்ங்கிற முடிவோட உங்களுக்கு சொல்றோம். இதுல மிருகங்கள் ஒருத்தர ஒருத்தர் கொல்லாம, ஏமாத்தாம, புத்திசாலித்தனமா யோசிச்சு, உணர்ச்சிகளை சரியா புரிஞ்சுகிட்டு ஒத்துமையா வாழ கத்துக்கறாங்க. இந்தக் கதைகள் உங்களை சிந்திக்க வைக்கும், யோசிக்க வைக்கும், முக்கியமா, உங்கள சுத்தி இருக்குறவங்களோட சிரிச்சிகிட்டு கிரிச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ உதவி பண்ணும்னு நம்பறோம்! கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க!"
Bavya , Deepika Arun , Thilagam (Author), Deepika Arun , Sai Kaarthik , Samyuktha Arun (Narrator)
Audiobook · 2 hrs 26 mins
[Tamil] - Chittukuruvi Stories Part 1
"Chittu Kuruvi Stories—Deepika narrates stories of famous Tamil children story writers like Azha Valliyappa. She has stock of some all-time-hit stories among children—stories told by grandmas from generation to generation. She has ‘Little Cheenu’ stories written by Sandeepika (her own father C.V. Rajan) that carry interesting and fun-filled childhood anecdotes. She has Tamil tongue twisters and word puzzles; she has incidental stories narrated from other copyright free content available for children. Interestingly, Deepika’ own 6-year old daughter–Samyuktha Arun and the little girl’s Father, Grandma, Uncles and Cousins too give their voices to Chittu Kuruvi to make them livelier! The stories in Chittu Kuruvi are structured in such a way that the children are encouraged to discuss with their parents to help with answers to some questions and talk about issues mentioned in the stories and also learn many essential values and practices needed in life–like water conservation, cleanliness, helping parents in domestic chores, thrift, courtesy and so on."
Multiple Authors (Author), Deepika Arun , Samyuktha Arun (Narrator)
Audiobook · 2 hrs 14 mins
[Tamil] - Chittukuruvi Stories Part 2
Audiobook · 2 hrs 18 mins
[Tamil] - Chittukuruvi Stories Part 3
Audiobook · 2 hrs 6 mins
[Tamil] - Chittukuruvi Stories Part 4
Multiple Authors (Author), Deepika Arun (Narrator)
[Tamil] - Chittukuruvi Stories Part 5
Audiobook · 3 hrs 19 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 7 - Uttara Kandam
"ராமரைச் சந்தித்து வாழ்த்த வந்த அகஸ்திய முனிவர் ராமருக்கு ராவணனின் முழு சரித்திரத்தை சொல்ல ஆரம்பிப்பது, ராவணனின் முன்னோர்கள் பற்றிய கதைகள், ராவணனும் அவன் சகோதரர்களும் பற்றிய கதைகள், ராவணன் போர் வெறியுடன் பல உலகங்களுக்கும் திக் விஜயம் செய்து பலரையும் வெல்வது, ராவணனின் அகங்காரத்தை சிவபெருமான் அடக்குவது, ராவணன் குபேரனின் மகனிடமிருந்து சாபம் பெறுவது, ராவணன் வாலியிடமும், கார்த்த வீரியார்ஜுனனிடமும் அவமானப் பட்டு, சமாதானமாய்ப் போனது, ராவணன் மகன் இந்திரஜித்தின் அபார ஆற்றல் ஆகியவை முனிவரால் சொல்லப் படுகின்றன. தொடர்ந்து , அயோத்தி மக்கள் சீதையைப் பற்றி அவதூராய்ப் பேசியதை அறிந்த ராமர் அவளை வனவாசம் செய்ய அனுப்புவது, சீதை வால்மீகி முனிவருடன் தங்கி, ராமரின் வாரிசுகளான லவ குசர்களைப் பெற்றெடுப்பது, ராமரின் சிறப்பான ஆட்சி, பரதன், சத்ருக்னன், லக்ஷ்மணன் ஆகியோரின் வாரிசுகளுக்கு ஆள்வதற்கு நாடுகளை வழங்குவது, ராமர் சம்புகனை வதம் செய்வது, ராமர் அச்வமேத யாகம் நடத்திய சமயத்தில் லவ குசர்கள் வந்து வால்மீகி முனிவர் இயற்றிய ராமாயணத்தைப் பாடுவது, ராமர் சீதையை மீண்டும் தன் கற்பை நிரூபிக்கக் சொல்வது, சீதை அழைத்ததும் அவள் தாய் பூமாதேவி வந்து தன்னுடன் பூமிக்கு அடியே பாதாள லோகத்துக்குக் சீதையை கொண்டு போய்விடுவது, சீதை இல்லாத ராமரின் துக்கம், மகாவிஷ்ணுவான ராமர் தம் அவதாரத்தை நிறைவு செய்து, அயோத்தி வாசிகளுடன் சரயூ நதியிலிறங்கி உலககைத் துறந்து வைகுண்டத்துக்குத் திரும்புவது – ஆகியவை இடம் பெறுகின்றன."
Sandeepika (Author), Deepika Arun (Narrator)
Audiobook · 3 hrs 38 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 6 - Yuddha Kandam
"யுத்த காண்டத்தில் ராமர் வானர சேனையுடன் கிஷ்கிந்தையிலிருந்து புறப்பட்டு தெற்குக் கடற்கரையை அடைவது, இலங்கையில் ராவணனுக்கு அறிவுரை சொன்ன தம்பி விபீஷ்ணன் ராவணனின் கோபத்துக்கு ஆளவது, விபீஷ்ணன் ராமரரிடம் வந்து சரணடைவது, கடலரசன் மீது ராமர் கோபத்தை வெளிப்படுத்துவது, கடலைக் கடந்து இலங்கை செல்லப் பாலம் கட்டுவது, இலங்கைக்கு வந்து சேர்ந்து போரைத் துவங்குவது, ராவணன் மகன் இந்திரஜித்தால் தாக்கப் பட்ட ராம லக்ஷ்மணர்களை கருடன் குணப்படுத்துவது, ராவணனின் தம்பி கும்பகர்ணன் போரில் மடிவது, இந்திரஜித்தால் மீண்டும் படுகாயப் பட்ட ராம லக்ஷ்மணர்களை குணப்படுத்த அனுமார் ஸஞ்சீவனி மூலிகை மலையைத் தூக்கி வருவது, லக்ஷ்மணன் இந்திரஜித்தைக் கொல்வது, ராமர் கடைசியில் பிரம்மாஸ்திரம் கொண்டு ராவணனை வதம் செய்வது, சீதையைத் தீக்குளிக்கச் செய்து அவளது தூய்மையை உலகுக்கு நிரூபிப்பது, அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் எல்லாரும் திரும்பி வருவது, பதினான்காண்டு வனவாசம் முடிந்து வந்த ராமரை பரதன் வரவேற்பது, ராம பட்டாபிஷேகம் நடந்து மீண்டும் அயோத்தி மன்னராய் பொறுப்பேற்பது – ஆகியவை இடம்பெறுகின்றன."
Audiobook · 4 hrs 20 mins
[Tamil] - Ayndhaavadhu Marundhu
"இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை சித்தரிக்கும் ஒரு சிறுகதை . இவ்விரு ஆற்றல்களுக்கும் இடையே இருந்தாக வேண்டிய இன்றியமையாத ஒத்திசைவை சற்றும் பொருட்படுத்தாது மனிதன் எங்ஙனம் இயற்கையிலிருந்து விலகிச் செல்கிறான் என்பதை சொல்லும் கதை. இயற்கையின் விதிகளை அவன் எந்த அளவுக்கு உதாசீன படுத்துகிறான் என்பதைச் சொல்லும் ஓர் படைப்பு."
Jeyamohan (Author), Deepika Arun (Narrator)
[Tamil] - Sotru Kanakku
"அந்திமக் காலம் வரை நெஞ்சில் நிற்கும் அன்னையின் கை அது. தாயத்து கட்டிய மணிக்கட்டும், தடித்து காய்த்த விரல்களும் ,மயிரடர்ந்த முழங்கையும் கொண்ட ஒரு கரடிக்கரம். அன்னமிட்ட கைக்கு காப்பும் காசும் ஈடாகுமா? பசி மிகுந்த வயிற்றுக்கு ஈயப்படும் உணவிற்கு விலை வைக்க முடியுமா? வறுமையும் பசியும் வாழ்க்கையில் ஏற்படுத்தும் வெறுமையையும் வலிமையையும் மிக அழகாக சொல்லும் கதை. திருவனந்தபுரத்தில் சாலை தெருவில் சிறிய கொட்டகையில் சோற்றுக்கு கணக்கு பாராமல், வருபவர்களின் பசியோடு ருசியையும் அறிந்து அவர்களுக்கு உணவளித்த ஒரு மாபெரும் மனிதரின் கதை கேளுங்கள் !"
[Tamil] - Karippu Manigal
"தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து கடற்கரை நெடுகிலும் உப்பளங்கள் விரிந்திருக்கின்றன. ஆனால் தூத்துக்குடியைச் சார்ந்த கடற்கரையோரங்களில் உப்பு விளைச்சலுக்குத் தேவையான ஈரப்பதமில்லாத காற்றும், சூரிய வெப்பமும் ஆண்டில் பத்து மாதங்களுக்குத் தொடர்ச்சியாகக் கிடைப்பதால், மிகக்குறைந்த செலவில் தரமான உப்பு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, ஏற்கெனவே பழக்கமான தூத்துக்குடிப் பகுதிகளுக்கே செல்வதென்று முடிவு செய்தேன். நான் நேரில் கண்ட உண்மைகளையும் கேட்டு அறிந்த செய்திகளையும் சிந்தித்து ஆராய்ந்து அதன் அடிப்படையில் இவர்தம் வாழ்வை மையமாக்கி இக் கரிப்பு மணிகளை உருவாக்கியுள்ளேன். - ராஜம் கிருஷ்ணன்"
Rajam Krishnan (Author), Deepika Arun (Narrator)
Audiobook · 5 hrs 28 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 5 - Sundara Kandam
"சுந்தர காண்டத்தில், ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பாய்ந்து செல்வது, அங்கே சென்று சீதையைத் தேடுவது, அசோகவனத்தில் சிறைப்பட்டிருக்கும் சீதையை சந்தித்து ஆறுதல் தருவது, அசோக வனத்தை அழித்து, ராட்சசர்களைக் கதிகலங்க அடிப்பது, ராவணனைச் சந்தித்துப் பின் தப்புவது, இலங்கையைத் தீக்கிரையாக்கிய பின் அனுமார் கிஷ்கிந்தை திரும்பி ராமரிடம் சேதியை சொல்வது – ஆகியவை இடம்பெறுகின்றன."
Audiobook · 2 hrs 5 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 4 - Kishkintha Kandam
"கிஷ்கிந்தா காண்டத்தில் ராமர் அனுமனையும் சுக்ரீவனையும் சந்திப்பது, சுக்ரீவனுடன் நட்பு கொள்வது, வாலி-சுக்ரீவன் கதை, ராமர் வாலியைக் கொன்று, சுக்ரீவனை வானர அரசனாக்குவது, சுக்ரீவன் தன் வானரர்களை சீதையைத் தேடும் பணியில் அனுப்புவது, அங்கதன் தலைமையில் தெற்கே செல்லும் வானரர் படை, கழுகு சம்பாதியின் மூலம் சீதை இலங்கையில் இருப்பதை அறிவது, ஆஞ்சனேயர் இலங்கைக்குப் பறந்து செல்லத் தயாராவது – ஆகியவை இடம் பெறுகின்றன."
Audiobook · 1 hr 50 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 3 - Aaranya Kandam
"ஆரண்ய காண்டத்தில், சித்ரகூடத்தை விட்டு ராமர் சென்று வனத்துக்குள் தொடர்ந்து பயணிப்பது, விராதன் எனும் ராட்சசனை வதம் செய்வது, தவத்தால் பழுத்த பல ரிஷிகளையும் சந்திப்பது, அகஸ்திய முனிவரை தரிசிப்பது, அவர் ஆலோசனைப்படி பஞ்சவடியில் சென்று வாழ்வது, அங்கே வந்து தகாது நடந்து கொண்ட சூர்ப்பனகையை லக்ஷ்மணன் தண்டிப்பது, அதன் பலனாய் கர தூஷணர்கள் வந்து ராமருடன் போர் செய்வது, அவர்களை ராமர் வதம் செய்வது, சீதையின் அழகைப்பற்றி சூர்பனகையிடமிருந்து கேட்ட ராவணன், மாரீச மானின் உதவியுடன் சீதையைக் கவர்ந்து செல்வது, , சீதையை இழந்த ராமர் அளவிலா துக்கத்தில் ஆட்படுவது, கழுகு ஜடாயு சீதைக்கு உதவ முயன்று ராவணனால் வெட்டுப் பட்டு சாவது, ராவணன் சீதையை இலங்கைக்குக் கொண்டு சென்று சிறை செய்வது, ராமர் கபந்தன் எனும் ராட்சசனை வதம் செய்வது, வானரன் சுக்ரீவனைத் தேடி பம்பா ஏரிக்கு செல்வது, அங்கே சபரிக்கு அருள் செய்வது, ருஷ்ய சிருங்க மலையயை நாடிச் செல்வது – ஆகியவை இடம் பெறுகின்றன."
Audiobook · 2 hrs 41 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 2 - Ayodhya Kandam
"அயோத்தியா காண்டத்தில், ராமனின் சிறந்த குணங்களால் நாட்டுமக்கள் அவரை நேசித்தது, ராமனுக்கு முடிசூட்ட தசரதர் தீர்மானித்தல், மந்தரையின் துர்போதனையால் கைகேயி தசரதமிடமிருந்து பிடிவாதமாய் வரம் கேட்டு வாங்கியது, அதனால் தசரைப் பீடித்த சோகம், கைகேயி பெற்ற வரப்படி ராமர் காட்டுக்குப் புறப்படத் தயாராவது, அவருடனேயே சீதையும் லக்ஷ்மணனும் வனம் செல்வது, ராமரைப் பிரிய இயலாமல் அயோத்தி மக்கள் தொடர்ந்து அவர் கூடவே வருவது, ராமர் வேடுவ அரசன் குஹனை சந்திப்பது, பரத்வாஜ முனிவர் வழி காட்டியபடி, சித்ரகூடத்தில் சென்று வாசம் செய்வது, அயோத்தியில் ராமரின் பிரிவு தாங்காமல் மன்னர் தசரதர் மரணமடைவது, பரதன் அயோத்திக்கு வந்து, சேதி கேட்டுத் தன் தாயைக் கோபிப்பது, பரதன் ராமரைக் கூட்டி வரப் பெரும் படையுடன் காட்டுக்குச் செல்வது, ராமரை நாடு திரும்பச் சொல்லி வற்புறுத்துவது, அது நடக்காததால் ராமரது பாதுகளைப் பெற்று பரதன் நாடு திரும்பிவந்து பாதுகைகளுக்கு பட்டாபிஷேகம் செய்து ராமரது பிரதி நிதியாய் நாட்டை ஆள்வது – ஆகியவை இடம்பெறுகின்றன."
Audiobook · 3 hrs 58 mins
[Tamil] - Valmiki Ramayanam Part 1 - Bala Kandam
"குழந்தைகளுக்கு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லணும் என்கிற எனது முயற்சியிலே ஒரு அடுத்த முக்கியமான கட்டமாய், நான் வால்மீகி ராமாயணத்தை ஒரு தொடர்கதையா சொல்லணும் என்கிற முயற்சி வெற்றிகரமா ஒலிபரப்பாகி நிறைவு அடையறதுக்கு வழக்கம்போல உங்க எல்லோருடைய ஆதரவையும், ஆசிகளையும் வேண்டிக் கேட்டுக்கிறேன். இந்தப் பகுதி நூல் அறிமுகத்துடனும், கொள்ளைக்காரனாய் இருந்த ரத்னாகரன் வால்மீகி முனிவராய் உருவான கதையுடனும் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் பால காண்டத்தில் வால்மீகி ராமாயணம் உருவான கதையில் ஆரம்பித்து, தசரதர் அச்வ மேத யாகம் செய்ததன் மூலம் ஸ்ரீ ராமரும், அவரது சகோதரர்களும் பிறந்தது, விசுவாமித்திர முனிவர் பால ராமனை காட்டுக்கு அனுப்ப வேண்டுகோள் விடுத்தது, லக்ஷ்மணன் உடன் வர, அவருடன் வனம் சென்ற ராமன் தாடகையை வதம் செய்தது, விசுவாமித்திரரின் யாகம் காத்தது எல்லாம் சொல்லப்படுகிறது; பின் கங்கை பூமிக்கு வந்த கதை, தேவாசுரர்கள் பாற்கடலைக் கடைந்த கதை, அஹல்யை சாபம் பெற்ற கதை, ராமனின் பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது, ராம லக்ஷ்மணர்கள் விசுவாமித்திரருடன் மிதிலை சென்றது, அங்கே அவர்கள் விசுவாமித்திரரின் சரித்திரத்தைக் கேட்டறிந்தது, ராமன் சிவ தனுஸை ஒடித்து சீதையை மணந்தது, பின் அயோத்திக்குத் திரும்பும் வழியில் பரசுராமரை வென்றது, அயோத்தியில் ராமனும் சீதையும் மகிழ்ச்சியான மணவாழ்வைத் தொடங்கியது – ஆகியவரை பால காண்டத்தில் சொல்லப்படுகின்றன."
Audiobook · 3 hrs 28 mins
"குருகுலத்திற்கு புதிதாய் சேர்ந்த பையன் . அவன் எல்லோரிடமிருந்தும் வித்தியாசமானவர்! அவனுடைய கருத்து வேறுபாடுகளால் அவனால் அவனது வகுப்பு தோழர்களுடன் நட்பு கொள்ள முடியவில்லை. அவர்களுக்கு உதவ, குருஜி ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து, அனைவரையும் தடைகள் விளையாட்டை விளையாடச் சொல்கிறார். ஒவ்வொருவருக்கும் அவரவர் பிரச்சனைகள் எப்படி இருக்கிறது என்பதை இங்கே அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், நீங்கள் அவர்களைப் புரிந்துகொண்டு மதிக்கும்போது, நீங்கள் வெற்றிபெறலாம். எல்லோரும் எப்படி வித்தியாசமாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், அதுவே உலகத்தை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுகிறது."
Mukta Baam (Author), Deepika Arun (Narrator)
[Tamil] - Natpukku Oru Padam
"புதிதாக பள்ளியில் சேரும் மாணவி . இன்னொரு மாணவிக்கு அவளை பிடிக்கவில்லை! விளையாட்டின்போது அவர்கள் ஒருவருக்கொருவர் உதவ மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்கள் புத்தகங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். பிறகு குருஜி அவர்களைச் சேர்ந்து ஒரு ஓவியம் வரையச் சொன்னார். அவர்கள் வரைபடத்தை வரைய நிர்வகிக்கிறார்களா? இந்த கதையில் தெரிந்து கொள்ளுங்கள்!"
[Tamil] - Pudhu Thozhi
"புதிய தோழி ஒருத்தி இரு நண்பர்கள் இருக்கும் பள்ளியில் சேர்கிறாள். அவளுக்கு ஒரு தளர்ச்சி உள்ளது, அதனால் மக்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்கிறார்கள், ஆனால் இறுதியில் அவளை இன்னும் அதிகமாக காயப்படுத்துகிறார்கள். ஒரு நாள், ஒரு சிறுமியின் முழங்காலில் காயம் ஏற்பட்டு தளர்ந்து போகத் தொடங்குகிறது. அவளுக்கு எப்படி உதவ வேண்டும் என்பது அப்போதுதான் அனைவருக்கும் புரிகிறது !"
[Tamil] - Unmaikku Oru Sodhanai
"குருஜி யுதிஷ்டிரரின் கதையை குழந்தைகளுக்குக் கூறுகிறார், அவர்கள் உண்மையைப் பேசுவது எப்போதும் எளிதானது என்று நினைக்கிறார்கள். அடுத்த நாள் அவர்கள் உண்மையை மட்டுமே பேச முடிவு செய்கிறார்கள், உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை. அவர்களின் முடிவின் விளைவாக ஒரு சிறுவன் திட்டப்படுகிறார், மற்ற இரு குழந்தைகள் சண்டையிடுகிறார்கள், மேலும் உண்மையைச் சொல்வதும் கேட்பதும் எளிதான காரியம் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்தனர். ஆயினும் எப்போதும் உண்மையைச் சொல்வது எவ்வளவு முக்கியம் என்பதை குருஜி நிரூபிக்கிறார்."
[Tamil] - Oodha Nira Maaya Mandhira Nagam
"சுத்தம் செய்வதை வெறுக்கும் பிள்ளைகள் ! ஒரு நாள் இவர்களது ஊரின் 'கிளீனிங் மினிஸ்டர்' அவர்களை பார்க்க வந்து சுத்தம் செய்யாததற்கு தண்டனையாக அவர்களை சுருக்கி விடுகிறார்! பல மணிநேரம் செலவழித்து அந்த வேலையை செய்ததும், சுத்தம் செய்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் பிறகு உணர்கிறார்கள்! ஆனால் அவர்கள் எப்படி மீண்டும் சாதாரணமாக மாறினார்கள்? இந்த மந்திர ஊதா நிற நகம் என்றால் என்ன, அவர்கள் அதை கண்டுபிடித்தார்களா? இந்த கதையில் தெரிந்து கொள்ளுங்கள்!"
[Tamil] - Devadhayin Parisu
"ஒருபோதும் 'மன்னிக்கவும்' அல்லது 'நன்றி' என்பதைப் பயன்படுத்தாது இருக்கும் சிறுவன் . அவன் தனது அம்மா மற்றும் பாட்டி சொல்வதைக் கேட்பதில்லை. பிறகு ஒரு நாள் பாட்டி அவனுக்கு ஒரு கதையைச் சொல்கிறார்! மற்றவர்களுக்கு உதவும் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கும் தேவதையைப் பற்றிய ஒரு கதை .இது அவனை மாற்றியதா ? இந்த அற்புதமான கதையைக் கேளுங்கள்!"
Rushikesh Nikam (Author), Deepika Arun (Narrator)
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP. Terms & Conditions | Privacy Policy | Disclaimer
The National Year of Reading starts here. Join thousands of families and schools supporting reading for pleasure across the UK.