Browse audiobooks narrated by Ramani, listen to samples and when you're ready head over to Audiobooks.com where you can get 3 FREE audiobooks on us
6 audiobooks in our catalogue, every one with its narrator named.
[Tamil] - நீதிக்கதைகள்
"வெள்ளியங்காட்டான் (1904 - 1991) என்னும் தமிழ்க் கவிஞரின் இயற்பெயர் என். கே. இராமசாமி. தன்னுடைய வாழ்க்கைப்பாட்டிற்காக விவசாயியாக, தையல்காரராக, ஆசிரியராக, இதழொன்றில் மெய்ப்புப் பார்ப்பவராக (Proof Reader) பணியாற்றியவர். பகுத்தறிவாளராக, ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைப் போராளியாக, கவிஞராக இனங்காணப்படுபவர். தன்னுடைய ஊரை அடியாகக்கொண்டு வெள்ளியங்காட்டான் என்னும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதினார். 'ஒரு எழுச்சி, ஒரு நுழைவு, ஒரு நெகிழ்வு, ஒரு பொறி, ஒரு ஏக்கம், ஒரு வியப்பு, ஒரு தோற்றம், ஒரு மின்னல், இவற்றுக்கு வண்ணம் கொடுத்து வெளிப்படுத்தும் கவிதைக்கு 'லிரிக்' என ஆங்கில இலக்கியத்தில் அடையாளம் கூறப்படுகிறது. வெள்ளியங்காட்டான் கவிதைகளைப் படித்தபோது 'லிரிக்' கவிதைகளுக்கு வேண்டிய கனல் மூண்டிருப்பதைக் கண்டேன்” என்கிறார் கவிஞர் திரிலோக சீதாராம். 'வயல் வெளிகளிலே அன்பு / வடிவ நெல்லெல்லாம் / சுயநல எருமை அந்தோ / சூறையாடுதே' என்ற வெள்ளியங்காட்டான் பாடலையும் இதர பாடல்களையும் குறிப்பிட்டு எளிமையும், உண்மையான உணர்ச்சியும் உள்ள பாடல்கள் வெள்ளியங்காட்டான் பாடல்கள் என பேராசிரியர் அ. சீனிவாசராகவன் குறிப்பிடுகிறார். “வெள்ளியங்காட்டானை யார் என்று எனக்குத் தெரியாது. அவர் பாடல்களோ எனக்கு பழக்கமிருக்கிறது. அவர் பாடல்களில் நாட்டின் பண்பு நன்றாக இருக்கிறது. உண்மைகளையே சொல்லியிருப்பதனால் பாட்டுகள் பொருளுடையனவாக இருக்கின்றன” என்கிறார் கொத்தமங்கலம் சுப்பு. இளைஞர் இலக்கியம் எதைச் செய்கிறதோ இல்லையோ ஆற்றுப்படுத்தலைச் செய்யா இளைஞர் இலக்கியம் இளைஞர் இலக்கியமாகாது. வெள்ளியங்காட்டானின் நீதிக் கதைகள் இளைஞர் இலக்கியத்தின் இந்த இலக்கணத்துக்குச் சான்று. கருணை, தியாகம், ஈகை, மதிப்பு, பொறுப்பு, மனிதன், மரணம் என்று விழுமியங்கள் பேசும் கதைகள். பேராசிரியர் ரமணியின் குரலில் இளைஞர் கேட்க ஓர் ஒலி நூல். "
வெள்ளியங்காட்டான் (Author), Ramani (Narrator)
Audiobook · 1 hr 9 mins
[Tamil] - தொல்காப்பியம்
"தொல்காப்பியம் என்பது இன்று கிடைக்கப்பெறும் மிக மூத்த தமிழ் இலக்கண நூலாகும். இது இலக்கிய வடிவிலிருக்கும் ஓர் இலக்கண நூலாகும். இந்நூலை இயற்றியவர் தொல்காப்பியர் என்று தொல்காப்பியப் பாயிரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது. பழங்காலத்து நூலாக இருப்பினும் இன்றுவரை தமிழ் இலக்கண விதிகளுக்கு அடிப்படையான நூல் இதுவே. தொல்காப்பியம் 1610 (483+463+664) நூற்பாக்களால் ஆனது. இதன் உள்ளடக்கம், எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், பொருளதிகாரம் என மூன்று அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதலாவது எழுத்ததிகாரம் தனிமொழியிலும், புணர்மொழியிலும் உள்ள எழுத்துகளைப் பற்றிக் கூறுகிறது. இரண்டாவது சொல்லதிகாரம் மொழித்தொடர் அமையும் பாங்கைச் சொல்கிறது. மூன்றாவது பொருளதிகாரம், எழுதப்படும் நூலிலுள்ள வாழ்க்கைப் பொருளையும் அப்பொருள் சொல்லப்பட்டுள்ள யாப்பு, அணி முதலான பாங்குகளையும் தமிழ்மரபையும் விளக்குகிறது. எழுத்ததிகாரம் நூல் மரபு மொழி மரபு பிறப்பியல் புணரியல் தொகை மரபு உருபியல் உயிர் மயங்கியல் புள்ளி மயங்கியல் குற்றியலுகரப் புணரியல் சொல்லதிகாரம் கிளவியாக்கம் வேற்றுமை இயல் வேற்றுமை மயங்கியல் விளி மரபு பெயரியல் வினை இயல் இடையியல் உரியியல் எச்சவியல் பொருளதிகாரம் அகத்திணையியல் புறத்திணையியல் களவியல் கற்பியல் பொருளியல் மெய்ப்பாட்டியல் உவமவியல் செய்யுளியல் மரபியல் தொல்காப்பியரைப் புலம் தொகுத்தோன் என்று தொல்காப்பியத்துக்குப் பாயிரம் தந்த பனம்பாரனார் குறிப்பிடுகிறார். புலம் என்னும் சொல் இலக்கணத்தைக் குறிக்கும். இலக்கணம் என்னும் சொல்லும் தூய தமிழ்ச்சொல்லே. இதனை இலக்கணம் - சொல்விளக்கம் என்னும் பகுதியில் காணலாம். தொல்காப்பிய நூற்பாக்கள் அனைத்தையும் ரமணியின் நேர்த்தியான வாசிப்பில் கேட்கலாம்."
தொல்காப்பியர் (Author), Ramani (Narrator)
Audiobook · 4 hrs 32 mins
Matthew Arnold Poems
"Matthew Arnold Poems from RamaniAudioBooks has the following poems rendered by Dr.N.Ramani 1.Dover Beach 2. Immortality 3. Lines written in Kensington Garden 4. Morality 5. Philomela 6. Rugby Chapel 7. Shakespeare 8. The Scholar Gypsy 9. The Forsaken Merman"
Arnold (Author), Ramani (Narrator)
Alfred Lord Tennyson Poems
"Alfred Lord Tennyson Poems from Ramani has the following poems : 1.Break Break Break 2. Crossing the Bar 3. Late, Late, so Late 4. Milton 5. Recollections of the Arabian Nights 6. St.Agnes Eve 7. The Brook 8. The Charge of the Light Brigade 9. The Eagle 10. The Lotos Eaters 11. Tithonus 12. Ulysses 13. You Ask me"
Tennyson (Author), Ramani (Narrator)
Audiobook · 1 hr 2 mins
[Tamil] - Alli Arasani Malai
"நம் இதிகாசங்கள், புராணங்கள் எல்லாவற்றுக்கும, குறிப்பாக ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றுக்கு மூன்று மரபுகள் இருக்கின்றன – காவிய மரபு, கலை மரபு மற்றும் வழிபாட்டு மரபு. அதிலும் மகாபாரதத்தில் கலை மரபில் பல பிராந்திய அளவிலான கதைகள் கிளைத்திருக்கின்றன அல்லது இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன. அந்த மரபு சில சமயம் வழிபாட்டு சடங்குகளாகவும் பரிணமித்திருக்கறது. தமிழகத்தைப் பொறுத்த வரை நாட்டுப் பாடல்கள், நாட்டார் கதைகள் – குறிப்பாக புகழேந்திப் புலவர் 15-ஆம் நூற்றாண்டில் எழுதியதாக சொல்லப்படும் அம்மானைகள் – கலை மரபின் ஊற்றுக்கண்ணாக இருக்கின்றன. இவை பாட ஏற்றவை. பாடவே எழுதப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆசிரியப்பாவின் சந்தத்தில் அமைந்திருக்கின்றன. பிற்காலத்தில் இவற்றின் அடிப்படையில் இசை நாடகங்கள், தெருக்கூத்துக்கள் எழுதப்பட்டு நடிக்கப்பட்டிருக்கின்றன. கதைப்பாடல் காவிய மரபு என்றும் சொல்லலாம். அது என்னவோ தெருக்கூத்தில் பாரதக்கதைகள் அதிகம், ராமாயணம் அதிகமாகக் காணப்படுவதில்லை. அபிமன்னன் சுந்தரி மாலை, அல்லி அரசாணி மாலை, ஏணியேற்றம், பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, புலந்திரன் தூது, பொன்னருவி மசக்கை, மின்னொளியாள் குறம், திரௌபதி குறம், அல்லி குறம், விதுரன் குறம், பஞ்சபாண்டவர் வனவாசம், சுபத்திரை மாலை ஆகியவற்றை புகழேந்திப் புலவர் எழுதி இருக்கிறாராம். அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை ஆகியவை புகழ் பெற்றவை."
Pukazhenthi (Author), Ramani (Narrator)
Audiobook · 6 hrs 46 mins
[Tamil] - Pavalakkoti
Pukazhendi (Author), Ramani (Narrator)
Audiobook · 4 hrs 42 mins
©PTC International Ltd T/A LoveReading is registered in England. Company number: 10193437. VAT number: 270 4538 09. Registered address: 157 Shooters Hill, London, SE18 3HP. Terms & Conditions | Privacy Policy | Disclaimer
The National Year of Reading starts here. Join thousands of families and schools supporting reading for pleasure across the UK.